tamilnadu

img

கொரோனா தொற்றைப் பரப்பியதாக பாடகி கனிகா கபூர் மீது எப்ஐஆர்... குடியரசுத் தலைவர், முன்னாள் முதல்வர், 3 எம்.பி.க்கள் பாதிப்பு?

லக்னோ:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகிகனிகா கபூர், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாடகி கனிகா கபூர், மார்ச் 9-ஆம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். 11-ஆம் தேதி அவர் லக்னோ சென்றுள்ளார். மார்ச் 15 அன்று இரவு,அங்குள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில், தனது நண்பர்களுக்கு விருந்துவழங்கியுள்ளார்.அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர் - நடிகைகள் என100 பேர் கலந்து கொண்டுள்ளனர். 

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, தனது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த்துடன் கலந்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்பிரதாப் சிங், அப்னாதள் எம்.பி. அனுப்பிரியா படேல் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.இதனிடையேதான், லக்னோவிலுள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில், கனிகா கபூருக்குகொரோனா இருப்பது தெரியவந்துள் ளது. இது 15-ஆம் தேதி கனிகா கபூருடன் விருந்தில் கலந்துகொண்டவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் மார்ச் 18-அம் தேதி நடந்தநாடாளுமன்ற கூட்டத்தில், வசுந்தரா ராஜேயின் மகனும் சக எம்.பி.யுமான துஷ்யந்த்திற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்துள்ளார். நாடாளுன்ற நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார். எனவே, கனிகா கபூரின் சோதனை முடிவுகளை அறிந்த அவர், முன்னெச்சரிக்கையாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். பிரையனின் நண்பரான மற்றொரு திரிணாமுல் எம்.பி. சுகேந்து சேகர் ராயும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரையொட்டி, வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து உரையாடிய நிலையில், ராம்நாத் கோவிந்த்துக்கும் தொற்று பரவியிருக்கலாம் என்றஅச்சம் எழுந்துள்ளது. அவருக்குத் வெள் ளிக்கிழமையன்று கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவு இன்னும் வெளியாகவில்லை.இந்நிலையில்தான், கனிகா கபூர், தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கொரோனா தொற்று சோதனைநடந்ததா? என்பதையும் யாரிடமும் தெரிவிக்கவில்லை; தொற்று நோய் குறித்த அரசின் உத்தரவுகளை பின்பற்றுவதில் அலட்சியப்படுத்தி இருக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.உண்மைகளை மறைத்து, பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக பாடகி கனிகா கபூர் மீது வெள்ளிக்கிழமையன்று இரவு, தொற்றுநோய் சட்டம் 188, 269, 270 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

;